முதல் முத்தம்

16 02 2012

குழந்தையாய்

கொடுத்ததும்  பெற்றதும் 

நினைவில் இல்லை 

புன்னகை மன்னனின் 

முகம் கொள்ளா  முத்தம் பார்த்து 

அன்று கமல் ஹாசனுக்கு 

இன்று 

கண்டேன் காதலை பரத் வரை  

என் ஈர இதழ்கள் பந்திந்த

எல்லா (வார) இதழ்களும்

அடுப்பெரிக்கவும்  பயன்படாத

ஈரத்தில் தோய்ந்து கிடக்கின்றன

அறியப்படாமலும்

அனுபவிக்கப்படாமலும்

வறண்ட  இதழோரம்

காத்திருக்கிறது

என் முதல் முத்தம்

முள் குத்தும் கன்னத்திற்காக





Anjali, Myself & Brain – short film (100 % mokkai)

16 02 2012

I am coming back to this space after long time….as I mentioned earlier I have released my first short film .

 This is oru mokkai movie so don’t expect too much… it’s in english(bad) ….next time I am going to try in tamil. All the lead actors and crew are my colleagues.

The YouTube link of the short film  – http://www.youtube.com/watch?v=w5-7a4IkDP0
 - An IT guy tries to find a Girl… he thinks he is smart but what happens in relationship





விருப்பம்

2 03 2010

காதலில்

புது கவிதையாய் இருந்தவள்

கல்யாணத்தில்

மரபு கவிதையாகிவிட்டேன்

என்கிறாய்

இரண்டையும் எழுதியவன்

நீதானே

அதற்குத்தான்

அன்றே சொன்னேன்

புது கவிதை

யார் வேண்டுமானாலும் எழுதலாம்

மரபு கவிதை இலக்கணம்

அறிந்தவர்களுக்கு மட்டும்

நீதான் எழுதினாய்

ஒரு  வரி கவிதை ..

இரு கால் பூ …

உலா வரும் பூந்த்தொட்டி …

உன் பெயரை சூட்டும்  வரை

அதனை நிலா என்று அழைப்பதில்லை …

இப்படி பல …

நீ கவிஞனானால்

நான் கவிதையாக வேண்டும்

நீ கணவனானால்

நான் காப்பி கலக்கவேண்டும்

நீ சிற்பியானால்

நான் சிலையாக வேண்டும்

இப்படி எல்லாமுமாக

நான் ஆக வேண்டும்

உன் விருப்பபடி

இங்கே எது நடக்கும்

என் விருப்பபடி

நானே நடக்காதபோது





நேற்றைய கிறுக்கல்கள்

5 02 2010

காகம் கரைந்தது 

விருந்தாளி வருவார்களாம்

மாலையில் நீ வந்தாய்

எதிர் வீட்டில் குடியேற 

எல்லோர் வீட்டிலும் தண்ணீர் 

தெளித்தார்கள்

உன் வீட்டில் மட்டும் பன்னீர் 

உன் கை பட்டதால்

நான் ஒரு நாத்திகன் 

என்றார் உன் அப்பா

மகாலட்சுமி உன்னை 

வீட்டில் வைத்துக்கொண்டே

கடற்கரையில் எல்லோரும்

தண்ணீரில் நனைய

நீ மட்டும்

தண்ணீரை  நனைத்தாய்

பிறர் அழைத்தால்

அது என் பெயர்

உன் உச்சரிப்பில்

அதுவே ராகமானது

இதுவரை பாதங்களை

ஏந்திய செருப்புகள்

நீ அணிந்தபோதுதான்

கவிதையை  

சுமக்கும் பேரு பெற்றன





மழை

5 02 2010

வருந்தி அழைத்தாலும் வராது

தானாக வரும் காதல் போல

    ——- 

எத்தனை முறை பெய்தாலும்

அடுத்தமுறை எப்போது

ஏக்கத்தில் மனது

——–

மழை எழுதிப்பார்த்ததில்

நனைந்து போனது இதயம்

——

குடை பிடித்து தடுத்தாலும்

தடை தவிர்த்து பாதம் தொடும்

——-

மழை இசை

மழை இரைச்சல்

மழை இம்சை

மழை இயக்கம்

——–

மழைக்காக காத்திருந்த மனசு

வந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா

——-

வராத போது மழை பிடிக்கும் மனசுக்கு

வந்தவுடன் குடை பிடித்துவிடும்

——-

கறுப்பு கொடி காட்டினாலும்

கம் என்று பெய்துவிடும்

——–

கவிஞனுக்கு மழை கூடல்

சிறுவனுக்கு அது கடல்

——-

நின்ற பின்னும்

பெய்துகொண்டே ……இருக்கும்

மனதில்

——

உழவு நிலத்தில் விளைச்சலானது

பரிணாம வளர்ச்சியில் அரசியலானது





தினமும்

3 12 2009

இவன் மனம் சிகரெட் புகை போல் சந்தேகத்தால் கசிய தொடங்கிய அதே வேளையில் அவள் அவனுடன் காரில் ….

…………………..

வாங்க நீங்களும் சேர்ந்து எழுதலாம் இல்லை முடிக்கலாம்





முன்பிருந்த நான்

3 12 2009

என் எண்ணங்களில்
நீ இல்லை
வண்ண கனவுகளில்
நீ இல்லை
உள்ளத்தில் இல்லை
உணர்வுகளில் இல்லை
காரணம்
நானே நீயாகியிருப்பதால்
ஆத்மா ஒன்றுதான் என்றாலும்
முன்பு நான் ஆணாக இருந்தேன்
இப்பொழுது பெண்ணாகியுள்ளேன்
எனக்கு இப்பொழுது
ஒரு கவலை
முன்பிருந்த என்னைவிட
இப்பொழுதுள்ள என்னை
கொஞ்சம் better ஆக
உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான்








Follow

Get every new post delivered to your Inbox.